போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்


போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்
x
தினத்தந்தி 5 Dec 2019 5:40 AM IST (Updated: 5 Dec 2019 5:40 AM IST)
t-max-icont-min-icon

போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் வெளியானதாக, நடிகை ரம்யா பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.


‘ஜோக்கர்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆண் தேவதை உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் வீட்டு மொட்டை மாடியில் சேலையில் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் வைரலானது. சேலையில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டனர். மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் விஷமிகள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கினர்.

அதில் சில நிர்வாண படங்கள் இருந்தன. ஆபாச வார்த்தைகளையும் பதிவு செய்தனர். அந்த புகைப்படத்தில் இருப்பது ரம்யா பாண்டியன்தான் என்று இணையதளத்தில் தகவல்களை பரப்பினர். இதுகுறித்து தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் ரம்யா பாண்டியன் அதிர்ச்சியானார்.

இதுகுறித்து டுவிட்டரில், “சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்பி உள்ளனர். அது எனது உண்மையான கணக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். டுவிட்டரில் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story