சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் `ராஜவம்சம்' படத்தில் நட்சத்திர பட்டாளம்


சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் `ராஜவம்சம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 5:28 PM IST)
t-max-icont-min-icon

`ராஜவம்சம்' படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.

`சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் பிரபலமான சசிகுமார், நாடோடிகள்,  `குட்டிப்புலி,' `வெற்றிவேல்,' `கிடாரி' உள்பட இதுவரை 18 படங்களில்  கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருடைய 19-வது படத்துக்கு,  `ராஜவம்சம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், சசிகுமார்  ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமய்யா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, `கும்கி' அஸ்வின், ராஜ் கபூர், நமோநாராயணன், சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட 49 பேர் நடித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனர் கதிர்வேலு டைரக்டு செய்கிறார். இவர், டைரக்டர் சுந்தர் சி.யிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

Next Story