ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி?


ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி?
x
தினத்தந்தி 6 Dec 2019 5:29 AM IST (Updated: 6 Dec 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது.

ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவரது முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதை சிலர் பாராட்டினர். இன்னும் சிலர் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என்று விமர்சித்தனர்.

எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. கதாபாத்திரத்துக்காக விஷேசமாக பரதநாட்டியம் கற்று கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். வெப் தொடரிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் சசிகலா வேடத்தில் நடிக்க படக்குழுவினர் அவரை அணுகி உள்ளனர்.

கங்கனா ரணாவத்துடன் அனைத்து காட்சிகளிலும் சேர்ந்து வருவதுபோல் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனர்.

Next Story