சினிமா செய்திகள்

கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம் + "||" + In story selection Keerthi Suresh is the focus

கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்

கதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“‘நான் அணிகிற உடைகள் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு காரணம் பேஷன் டிசைனில் எனக்கிருந்த ஆர்வம்தான். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் பலனும் ஆனந்தமும் கிடைக்கும். வேலையை மகிழ்ச்சியோடு செய்தாலே வெற்றி அடைந்த மாதிரிதான்.


ஒவ்வொருவரும் விருப்பமான தொழிலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எனக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களை விரும்பி செய்கிறேன். அதுமாதிரி வேடங்களை எதிர்பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கி விட்டேன். நிலையான இடமும் கிடைத்து இருக்கிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறப்பாக நடித்து கொடுப்பார் என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள். கதை என்ன எனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உள்பட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்கிறேன்.

சினிமா எல்லோரும் சேர்ந்து செய்கிற உழைப்பினால் வந்தால்தான் வெற்றியடையும். எல்லோரும் ஒரே எண்ணத்தோடு இணைந்து வேலை செய்தால்தான் ஜெயிக்க முடியும். வணிக படங்களிலும் நடிக்க ஆர்வம் உள்ளது.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.