சினிமா கேள்வி பதில்! குருவியார்: குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா?


சினிமா கேள்வி பதில்! குருவியார்:  குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா?
x
தினத்தந்தி 8 Dec 2019 12:49 PM IST (Updated: 8 Dec 2019 12:49 PM IST)
t-max-icont-min-icon

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

‘காளிதாஸ்’ படத்தில், பரத்-அனீ ஷீத்தல்!
குருவியாரே, ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் இசையமைப்பாளர் யார்? (எஸ்.சங்கீதராஜன், உடுமலைப்பேட்டை)

‘தர்பார்’ படத்தின் இசையமைப்பாளர், அனிருத்! அவர் இசையில் உருவான பாடலை கேட்டு, ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்!

***

குருவியாரே, இப்போதைய கதாநாயகர்களில், ‘டூப்’ போடாமல் சண்டை காட்சிகளில் அசலாக நடிப்பது யார்-யார்? (கே.அர்ஜுன், காஞ்சீபுரம்)

விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் ஆகிய 6 பேரும் ‘டூப்’ போடாமல், அவர்களே அசலாக நடித்து வரு கிறார்கள்!

***

குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா? (எஸ்.பி.ராஜ்குமார், கம்பம்)

ரூ.100 கோடியை தாண்டியது, உண்மை!

***

திரையுலகில் கதை திருட்டு என்பது இப்போது மட்டும்தானா அல்லது அந்த காலத்தில் இருந்து நடக்கிறதா? (ஆர்.சூர்யா, சேலம்)

அந்த காலத்தில், எப்போதாவது ஒருமுறை நடந்த கதை திருட்டு, இப்போது அடிக்கடி நடக்கிறது. பழைய படங்களை அப்படியே ‘உல்ட்டா’ செய்வதை சில பெரிய டைரக்டர்களே செய்து வருகிறார்கள்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி ஆகியோர் நடித்த ‘ராஜா,’ எந்த இந்தி படத்தின் தழுவல்? இந்தி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் யார்? (க.அஸ்வின், மயிலாடுதுறை)

‘ஜானி மேரா நாம்’ என்ற இந்தி படத்தின் தழுவல், ‘ராஜா.’ இந்தி படத்தின் கதாநாயகன், தேவ் ஆனந்த்!

***

குருவியாரே, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்றுள்ள ரேவதி, அம்பிகா ஆகிய இருவரில் அதிக சம்பளம் வாங்குகிறவர் யார்? சின்னத்திரையில் எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது? (சோ.கார்த்திக்,கோவை)

ரேவதி அதிக சம்பளம் வாங்குவதாக கேள்வி. ‘சின்னத்திரை’யில் தினசரி சம்பளம் வழங்கப் படுகிறது!

***

சிவாஜியும், விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படம் எது? (த.நேரு, வெண்கரும்பூர்)

சிவாஜியும், விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர், ‘வீரபாண்டியன்.’

***

குருவியாரே, பாரதிராஜாவும், இளையராஜாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிவார்களா? (ஏ.முஸ்தபா, சமாதானபுரம்)

இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியும் படத்தை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்!

***

லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் என்ன? (மா.சுப்புராஜ், திருப்பூர்)

அந்த படத்துக்கு, ‘சம்பவம்’ என்று பெயர் சூட்ட இருந்தார்கள். அந்த ‘டைட்டில்’ இன்னொரு பட நிறுவனத்திடம் இருப்பதால், வேறு ஒரு டைட்டிலை யோசித்து வருகிறார்கள்!

***

குருவியாரே, நயன்தாராவுக்கு பொருத்தமான ஜோடி (கதாநாயகன்) யார்? (பி.சுந்தரி, மேலூர்)

நிச்சயமாக சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரும் அல்ல. விக்னேஷ் சிவன்தான் பொருத்தமான ஜோடி என்று நயன்தாரா சொல்கிறாராம்!

***

திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா, இப்போது ரகுல் பிரீத்சிங்கை காதலிக்கிறாராமே, அது உண்மையா? (கே.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்)

அப்படி ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி, கண்ணும் காதும் வைத்து பேசப்பட்டது!

***

நடிகை ராதாவின் 2 மகள் களும் இப்போது திரைப்படங்களில் நடிக்கிறார்களா, இல்லையா? (கே.ஆர்.உதயகுமார், சென்னை-1)

ராதா மகள்கள் இரண்டு பேருமே இப்போது நடிக்கவில்லை. இரண்டு பேரும் மும்பையில், அவர்களுக்கு சொந்தமான ஓட்டல் தொழிலில், அப்பா-அம்மாவுக்கு உதவியாக இருக்கிறார்கள்!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர் சார்லி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? இப்போது எத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்? (த.இந்திரஜித், மேலவளவு)

சார்லி, 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் 6 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக் கிறார்!

***

கவிஞர் வைரமுத்து திரைப்படங்களுக்கு பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறாரா? அல்லது கதை-வசனமும் எழுதியுள்ளாரா? (மு.தமிழரசன், கோவில்பட்டி)

கவிஞர் வைரமுத்து பாடல்களுடன், சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்!


Next Story