சினிமா செய்திகள்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி லாரன்ஸ் விளக்கம் + "||" + Lawrence's description of what Durbar spoke at the music launch

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி லாரன்ஸ் விளக்கம்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி லாரன்ஸ் விளக்கம்
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கமல் போஸ்டரில் சாணி அடித்தது பற்றி பேசியதற்கு நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்ததாகவும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். 

கமல் மீது அதிக மரியாதை உள்ளது என்றும், தான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தர்பார் இசை வெளியீட்டு விழாவில், பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும் எனவும்  அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்றும் நடிகர் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.