சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அமீர்கான் தோற்றம்


சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அமீர்கான் தோற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2019 5:32 AM IST (Updated: 9 Dec 2019 5:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் அமீர்கான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார்.

டங்கல் படத்தில் 2 பெண் குழந்தைகளின் தந்தையாக வந்தார். இந்த படம் சீனாவில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

சமீபத்தில் திரைக்கு வந்த தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்துக்கு பிறகு அமீர்கான் ‘லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் டாம் ஹாங்க்ஸ், ரோபின் ரைட், கேரி சினிஸ், மிக்கேலி வில்லியம்சன் ஆகியோர் நடித்து ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கி 1994-ல் வெளியான பாரஸ்ட் கம் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்காக தயாராகிறது.

இதில் டாம் ஹாங்க்ஸ் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். ஜோடியாக கரீனா கபூர் வருகிறார். ஏற்கனவே இவர்கள் திரி இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இயக்குகிறார். லால் சிங் சத்தா படத்தில் அமீர்கானின் தோற்றத்தை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டனர்.

தற்போது படப்பிடிப்பில் ரசிகர்கள் திருட்டுத்தனமாக எடுத்த அமீர்கானின் தோற்றங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமீர்கான் மாதிரியே தெரியவில்லை.

முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Next Story