சினிமா செய்திகள்

ரூ.800 கோடியில் தயாராகும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது + "||" + Ponniyinselvan started shooting

ரூ.800 கோடியில் தயாராகும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது

ரூ.800 கோடியில்  தயாராகும் பொன்னியின்  செல்வன்  படப்பிடிப்பு  தொடங்கியது
தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது.
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.

குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் மற்றும் பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.

ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...