நித்யாமேனனின் தேசிய விருது கனவு


நித்யாமேனனின் தேசிய விருது கனவு
x
தினத்தந்தி 1 Jan 2020 5:27 AM IST (Updated: 1 Jan 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

“தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை. ஒரு நடிகையாக தேசிய அளவில் அடையாளம் காணப்படுவது சந்தோஷமான விஷயம். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எனக்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் படம் வழக்கமான கதையாக இருக்க கூடாது. வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அதில் நடிக்கவே செய்வேன்.

சினிமாவில் எனது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்.

எப்போதும் என்னை புதிதாக நடிக்க வந்த நடிகை மாதிரியே பார்க்கிறேன். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நினைப்பதே இல்லை. இப்போது சினிமாவுக்கு வந்த மாதிரிதான் தினமும் நினைத்து பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Next Story