ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்; எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படமாகிறது


ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்; எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படமாகிறது
x
தினத்தந்தி 3 Jan 2020 6:45 AM IST (Updated: 2 Jan 2020 5:42 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராதிகா சரத்குமார்  இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இருவரும் கணவன்-மனைவியாகவே வருகிறார்கள். படம், வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா சரத்குமார் ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

‘சின்னத்திரை’யில் 23 வருடங்களாக நடித்து வருகிறார். இவருடைய அடுத்த தொடர், ‘சித்தி-2. இப்போது அவர், ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனது தந்தை ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ராதிகா சரத் குமாரின் கனவு. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி விட்டார்.

இத்தனை ‘பிஸி’யான வேலைகளுக்கு இடையே அவர் பேரன் சராஜுடன் கொஞ்சி விளையாடுவதை மறக்கவில்லை. அபூர்வமாக கிடைக்கும் ஓய்வு நேரங்களை பேரனுடன் (மகள் ரேயானின் மகன்) கழிக்கிறார்.

Next Story