தாயை கொலை செய்ததாக ‘கேப்டன் அமெரிக்கா’ நடிகை கைது
கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த நடிகை மோலி, அவரது தாயை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
ஹாலிவுட் நடிகை மோலி பிட்ஸ் ஜெரால்டு. இவர் மார்வெல் நிறுவனம் தயாரிப்பில் 2011-ல் வெளியான கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். த லாபுல் டுரூத், த கிரீப்ஸ் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். சிறுபட்ஜெட்டில் ஹாலிவுட் படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள கான்ஸாஸ் நகரில் மோலி வசித்து வருகிறார். இவருக்கு 38 வயது ஆகிறது. மோலியின் தாய் பேட்ரீசியா (வயது 68) இவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் உறவினர் வீட்டில் வசித்தார். தற்போது கான்ஸாஸ் நகரில் குடியேறினார்.
கடந்த டிசம்பர் 20-ந்தேதி வீட்டில் பேட்ரீசியா பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும், மோலியே தனது தாயை கொன்று இருப்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து மோலியை போலீசார் கைது செய்தனர்.
சொந்த மகளாலேயே தாய் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
Related Tags :
Next Story