குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:07 AM IST (Updated: 5 Jan 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா, ‘சிரிப்பழகி’ சினேகா இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? (ஏ.அர்ஜுன், சென்னை–7)

புன்னகையை ரசிப்பதா? அல்லது சிரிப்பை ரசிப்பதா? என்ற கேள்வி மனதுக்குள் எழும்பும்!

***

மீனாவின் மகள் நைனிகா இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லையே...ஏன்? (கே.அரவிந்த், கரூர்)

நைனிகா முதலில் படிப்பில் கவனம் செலுத்தட்டும் என்று மீனா முடிவு எடுத்திருப்பதே காரணம். நைனிகா படிப்பை முடித்தபின், கதாநாயகியாக பார்க்கலாம்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் பாடல்கள் எப்படி? (கே.சி.மகேந்திர வர்மா, தேனி)

அதிரி புதிரி. ‘தர்பார்’ படத்தின் பாடல்களும், அந்த பாடல்களுக்கேற்ற ரஜினிகாந்தின் நடனமும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உள்ளன!

***

‘அசுரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி தனுஷ் மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது என்கிறார்களே...அது உண்மையா? (பி.தங்கசாமி, சிவகங்கை)

உண்மைதான். ஒரு மடங்கு...இரு மடங்கு அல்ல. பல மடங்கு தனுஷ் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி இருக்கிறது!

***

குருவியாரே, சிவகார்த்திகேயன் தொடர்ந்து சொந்த படங்களை தயாரிப்பாரா? (சி.வைதேகி, மதுரவாயல்)

நடிப்பைப்போல் தயாரிப்பையும் அவர் கைவிடப்போவதில்லையாம்!

***

இமயம் முதல் குமரி வரை மத வேறுபாடு பார்க்காமல் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிற ஒரே நடிகை நயன்தாராதான் என்கிறார்களே...? (டி.மனோகர் பிரசாத், ஊட்டி)

அவருக்கு போட்டியாக நமீதா வந்து விட்டார். இவரும் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வருகிறார்!

***

குருவியாரே, ஐஸ்வர்யா ராஜேசை சமீபகாலமாக படங்களில் பார்க்க முடியவில்லையே...ஏன்? (மு.கவிநேசன், அருப்புக்கோட்டை)

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். (தமிழ் படங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட, தெலுங்கு படங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்களாம்!)

***

1980–களில் பிரபலமாக இருந்த இளவரசி, சசிகலா போன்ற நடிகைகள் என்ன ஆனார்கள்? (ஜெ.ஸ்டீபன், தஞ்சை)

இளவரசி, சசிகலா ஆகிய 2 பேரும் ‘காணாமல் போன நடிகைகள்’ பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் படங்களில், ‘கானா’ பாடல்களை பாடியதில் முன்னோடி யார்? (எம்.கோபால், வந்தவாசி)

இசையமைப்பாளர் தேவா!

***

இந்தி நடிகைகள் ஐஸ்வர்யாராய், கங்கனா ரணாவத் ஆகிய 2 பேரில், அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (ஜி.ராஜன், குமாரபாளையம்)

ஐஸ்வர்யாராய் ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். கங்கனா ரணாவத்தின் சம்பளம், ரூ.12 கோடி!

***

குருவியாரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழி படங்களிலும் உச்ச நட்சத்திரமாக இருந்த அசின் மீண்டும் நடிக்க வருவாரா? (ஆர்.கோமதிநாயகம், கடையநல்லூர்)

அசின் மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக அவர், ‘ஜிம்’மே கதி என்றாகி விட்டார். விரைவில் அவர் களத்தில் குதிப்பார்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் கதை பஞ்சம் இருப்பது உண்மையா? (எஸ்.சேதுராம், குளித்தலை)

கதை திருட்டுகள் அடிக்கடி நடைபெறுவதில் இருந்தே புரியவில்லையா?

***

சரத்குமார் மீண்டும் அதிக படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராமே...இது, அவருடைய அரசியல் பணிகளை பாதிக்காதா? (எஸ்.பி.செல்வசிங், குன்றத்தூர்)

அரசியல் பணிகள் பாதிக்காத வகையில், படங்களில் நடிக்க அவர் முடிவு செய்து இருக்கிறார்!

***

குருவியாரே, தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ எப்போது திரைக்கு வரும்? (எம்.மோகன்ராம், ஸ்ரீரங்கம்)

‘பட்டாஸ்,’ பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திரைக்கு வரும்!

***

லட்சுமி மேனன் புதிய பட வாய்ப்புகளை மறுப்பதாக கூறப்படுகிறதே, ஏன்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள் புரம்)

அவர், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். அதனால் நடிப்புக்கு சின்ன இடைவெளி விட்டு இருக்கிறார். படித்து பட்டம் வாங்கிய பின், நடிப்பதில் கவனம் செலுத்துவாராம்!

***

குருவியாரே, வடிவேலுவுக்கும், யோகி பாபுவுக்கும் இடையே நகைச்சுவை நடிப்பு போட்டி வைத்தால், அதில் யார் வெற்றி பெறுவார்? (வே.ராஜீவ், பெரியகுளம்)

நிச்சயமாக வடிவேல்தான் வெற்றி பெறுவார். அவர் திரையில் தோன்றினாலே சிரிப்பு வந்து விடுகிறது. அந்த ரசனையை யோகி பாபு இன்னும் ஏற்படுத்தவில்லை!

***

பட உலகில் ‘மார்க்கெட்’ இழந்தால்தான் கதாநாயகிகள் திருமணம் செய்து கொள்ள முன்வருவார்கள். காஜல் அகர்வாலும் அப்படித்தானா? (கே.கவுசிக், குடியாத்தம்)

காஜல் அகர்வாலும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

***

குருவியாரே, விஜயசாந்தி விட்டுப்போன இடத்தை அனுஷ்கா பிடிப்பாரா? (எம்.என்.விஜயன், திருப்பூர்)

அந்த இடத்தை ஏற்கனவே ஒரு நடிகை கைப்பற்றி விட்டார்!

***

அஜித் பாணியைத்தான் பின்பற்றுவதாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் கூறியிருக்கிறாரே...? இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? (மே.அன்பரசன், நாகர்கோவில்)

உண்மையை உரக்க சொன்னதற்காக பிருதிவிராஜுக்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்!

Next Story