டைரக்டர் சீனுராமசாமியின் 2 படங்களும் ரிலீஸ் ஆகாதது ஏன்?
தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை உணர்வுப்பூர்வமாக சொல்லும் டைரக்டர்கள் பட்டியலில், புதுசாக இடம் பிடித்து இருப்பவர், சீனுராமசாமி. இவர் இயக்கிய `தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
சில பிரச்சினைகள் காரணமாக இவருடைய டைரக்ஷனில் உருவான `இடம் பொருள் ஏவல்,' `மாமனிதன்' ஆகிய 2 படங்களும் `ரிலீஸ்' ஆகாமல், வருடக்கணக்கில் முடங்கி கிடக்கின்றன. 2 படங்களிலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். `இடம் பொருள் ஏவல்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். `மாமனிதன்' படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். 2 படங்களும் `ரிலீஸ்' ஆகாதது பற்றி ஒரு ரசிகர் டுவிட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். ``தமிழ் சினிமா மரணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதா?'' என்று அவர் கேட்டிருந்தார்.
அவருக்கு சீனுராமசாமி பதில் அளிக்கும் வகையில், ``இந்த புத்தாண்டில் நன்மை பிறக்கட்டும்'' என்று கூறியிருக்கிறார்!
Related Tags :
Next Story