நீண்ட தலைமுடியுடன் வைரலாகும் விஜய் சேதுபதி தோற்றம்


நீண்ட தலைமுடியுடன் வைரலாகும் விஜய் சேதுபதி தோற்றம்
x
தினத்தந்தி 9 Jan 2020 5:00 AM IST (Updated: 9 Jan 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

சீதக்காதியில் வயதானவராக வந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தார். இந்த கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

பட விழாக்களில் சூப்பர் டீலக்ஸ் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது. தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கடைசி விவசாயி, லாபம் படங்களில் நடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன. இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

விஜய்யின் புதிய படமான மாஸ்டர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தநிலையில் விஜய் சேதுபதி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நீண்ட தலைமுடியில் இருக் கிறார். இது எந்த படத்துக்கான தோற்றம் என்பது தெரியவில்லை விஜய்யின் மாஸ்டர் படத்துக்கான தோற்றமாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து படக்குழுவினர் எந்த தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. புதிய தோற்றம் பிரமாதமாக இருப்பதாக விஜய் சேதுபதியை வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story