“மீண்டும் சினிமாவில் நடிப்பேன்” -சரோஜாதேவி
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தமிழ் பட உலகில் 1960 மற்றும் 70-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
தமிழில் கடைசியாக சூர்யாவின் ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சரோஜாதேவி அளித்த பேட்டி வருமாறு:-
“எனக்கு சினிமாவில் நடிக்க தொடர்ந்து அழைப்புகள் வந்தன. ஆனாலும் நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன். வயதான பாட்டி வேடங்களில் நடிப்பதற்கு விரும்பவில்லை. எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்.
இன்றைய நடிகைகள் திறமையாக நடிக்கின்றனர். ஆனாலும் சில நடிகைகள் அதிக சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் காலத்தில் பணத்தை பெரிதாக கருதியது இல்லை. நான் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டது இல்லை. சில நடிகைகள் விளம்பர படங்களிலும் நடிக்கிறார்கள். நடிகை கே.ஆர்.விஜயாவையும் விளம்பர படத்தில் பார்த்தேன். விளம்பர படங்களில் நடிப்பது அவரவர் விருப்பம்.
சமீபத்தில் நான் பார்த்த படங்களில் கார்த்தி-நாகார்ஜுனா நடித்த தோழா மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு படங்கள் பார்க்கவில்லை.”
இவ்வாறு சரோஜா தேவி கூறினார்.
சரோஜாதேவி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி இஸ்கான் அமைப்புக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
Related Tags :
Next Story