வைரலாகும் கவர்ச்சி உடை; பிரியங்கா சோப்ராவை விமர்சித்த ரசிகர்கள்
தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். அமெரிக்க பாப் பாடகர் நிக்ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்காவில் சொந்தமாக விலை உயர்ந்த வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.
பட விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் ஜோடியாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனசுடன் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.
அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முத்தமிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். விழா முடிந்ததும் அனைவரும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள். அதில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. கறுப்பு நிற மேலாடையும், வித்தியாசமான ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தார்.
கால்களை வெளிகாட்டும் வகையில் கண்ணாடி இழை போன்று அந்த ஆடை இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி எதிர்ப்பை கிளப்பி உள்ளது. அந்த ஆடையை அணிந்து வந்த பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story