பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை படமாகிறது


பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை படமாகிறது
x
தினத்தந்தி 2 March 2020 12:46 AM GMT (Updated: 2 March 2020 12:46 AM GMT)

நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் வாழ்க்கை, படமாக வந்துள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர் மற்றும் டோனி, நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் வாழ்க்கை, படமாக வந்துள்ளன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது.

உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி மாயாவதி வாழ்க்கை படத்தில் ரிச்சா சட்டாவும், கர்நாடக வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதர் வாழ்க்கை கதையில் மோகன்லாலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் மாதவனும் நடிக்கின்றனர். பேட்மிண்டன் வீராங் கனையான சாய்னா நேவால் வாழ்க்கை கதையில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்க்கை கதையை வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடிக்கிறார். இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது.

இவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர் ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

Next Story