தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?


தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
x
தினத்தந்தி 2 March 2020 6:24 AM IST (Updated: 2 March 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவரது திருமணம் குறித்து தொடர்ந்து கிசு கிசுக்கள் வருகின்றன.

பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகர் பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. இதனை இருவருமே மறுத்தனர். பின்னர் தொழில் அதிபரை மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடிக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது.

இதையும் அனுஷ்கா மறுத்தார். எனது திருமணத்தை பெற்றோர்கள் முடிவு செய்வார்கள் என்றார். இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணைய தளங்களில் தற்போது புதிய தகவல் பரவி வருகிறது.

அனுஷ்கா நடித்து தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி பெயர்களில் வந்த படத்தை பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருந்தார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை வைத்து 25 படங்கள் இயக்கிய பிரபல இயக்குனர் ராகவேந்திரராவின் மகன். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விட்டார்.

Next Story