என்னை பற்றி காதல் வதந்திகள்-பிரியா பவானி சங்கர்


என்னை பற்றி காதல் வதந்திகள்-பிரியா பவானி சங்கர்
x
தினத்தந்தி 3 March 2020 5:38 AM IST (Updated: 3 March 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவையும், நடிகை பிரியா பவானி சங்கரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இருவரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்தார். பிரியா பவானி சங்கர் நல்ல தோழி என்று கூறினார். பிரியா பவானி சங்கர் மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இளம் நாயகியாக வளர்ந்து வருகிறார். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்து வெளியான தகவலுக்கு இதுவரை பதில் அளிக்காமல் இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது முதன் முதலாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எஸ்.ஜே சூர்யாவையும், என்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாதான் பதற்றமாகி பதில் சொல்லி விட்டார். அதனாலேயே இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். நிஜத்தில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது.

கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது”. இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறினார்.

Next Story