சினிமா செய்திகள்

மே 1-ந் தேதி வெளியிட திட்டம்; சூர்யா, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் படங்கள் மோதல்? + "||" + Plan to release by May 1; Surya, Vishal, Jayamravi, Dhanush movies clash?

மே 1-ந் தேதி வெளியிட திட்டம்; சூர்யா, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் படங்கள் மோதல்?

மே 1-ந் தேதி வெளியிட திட்டம்; சூர்யா, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் படங்கள் மோதல்?
விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய 2 படங்களையும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை தள்ளி வைக்கும்படி வற்புறுத்தினர். இதையடுத்து சூரரைப் போற்று படத்தை மே 1-ந் தேதி வெளியிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதே நாளில் தனுசின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, விஷாலின் சக்ரா ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த 4 படங்களும் ஒரே நாளில் மோத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூரரைப் போற்று படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கி பிரபலமான சுதா கொங்கரா டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்களை சென்னையில் விமானத்தில் பறந்தபடி வெளியிட்டனர்.

சக்ரா படத்தை ஆனந்தன் இயக்கி உள்ளார். விஷால் ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் வருகிறார். பூமி படத்தை லட்சுமன் இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தனுசின் ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.