சினிமா செய்திகள்

ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’ + "||" + Sundar c with Arya. Acting and directing Aranmanai 3

ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’

ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’
ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’ என்ற புதிய படம் தயாராகிறது.
சுந்தர் சி. டைரக்டு செய்த `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதைத்தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமாக, `அரண்மனை-3’ என்ற புதிய படம் தயாராகிறது.

இதில் ஆர்யா, சுந்தர் சி, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத்குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சத்யா இசையமைக்கிறார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில், வான்கெனர் பேலஸ் என்ற அரண்மனையில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.