சினிமா செய்திகள்

மாஸ்டராக கல்லூரி மாணவர்களுக்கும், ரசிகர்களும் நடிகர் விஜய் செய்த செயல்! + "||" + VIJAY AND LOKESH KANAGARAJ PLANT TREE SAPLINGS AT MASTER SHOOTING

மாஸ்டராக கல்லூரி மாணவர்களுக்கும், ரசிகர்களும் நடிகர் விஜய் செய்த செயல்!

மாஸ்டராக கல்லூரி மாணவர்களுக்கும், ரசிகர்களும் நடிகர் விஜய் செய்த செயல்!
மாஸ்டர் படப்பிடிப்பின் முடிவில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்துள்ளனர்.
சென்னை,

விஜய்  அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள்  நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் இறுதிநாளில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

முதல்முறையாக கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், மாணவர்களும், தனது ரசிகர்களும் பின்பற்றும் வகையில் அங்கு மரம் நட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.