மீண்டும் வெளியான வக்கீல் தோற்றம் திரைக்கு வரும் ஜோதிகா படம்


மீண்டும் வெளியான வக்கீல் தோற்றம் திரைக்கு வரும் ஜோதிகா படம்
x
தினத்தந்தி 9 March 2020 4:00 AM IST (Updated: 9 March 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்தவானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்தவானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். சென்னை, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பொன்மகள் வந்தாள் இந்த மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் ஜோதிகாவின் முதல் தோற்றத்தை ஏற்கனவே வெளியிட்டனர். மகளிர் தினத்தையொட்டி தற்போது வக்கீல் சீருடையில் இருக்கும் ஜோதிகாவின் இன்னொரு தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பொன்மகள் வந்தாள் படத்தில் முதல் தடவையாக ஜோதிகா வக்கீல் வேடத்தில் நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அடுத்து கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான சரவணன் டைரக்டு செய்யும் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் சசிகுமாரும் நடிக்கிறார். இருவரும் அண்ணன்-தங்கையாக வருகிறார்கள். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

Next Story