சினிமா செய்திகள்

நடிகர் பிரபாஸ் சம்பளம் ரூ.70 கோடி + "||" + Actor Prabhas Salary 70 crore

நடிகர் பிரபாஸ் சம்பளம் ரூ.70 கோடி

நடிகர் பிரபாஸ் சம்பளம் ரூ.70 கோடி
பாகுபலி படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
இந்த படத்துக்கு பிறகு 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வந்த சாஹோ படத்துக்கு அவர் ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. சாஹோ படத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார்.


தற்போது கே.கே.ராதாகிருஷ்ணா இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை எடுத்து பிரபலமான நாக் அஸ்வின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்துக்கு தனக்கு ரூ.70 கோடி சம்பளம் வேண்டும் என்றும், 12 மாதங்களுக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்றும் அதையும் தாண்டி படபிடிப்பை நடத்தினால் மேலும் கூடுதல் சம்பளம் தரவேண்டும் என்றும் பிரபாஸ் நிபந்தனைகள் விதித்ததாகவும், இதனை பட நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பதாக வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.