மலையேற்றம், பைக் ஓட்டும் வீடியோ வெளியானது நடுக்காட்டில் ரஜினியின் சாகசம்
ரஜினிகாந்தும், பியர் கிரில்சும் கொடிய மிருகங்கள் உலவும் காட்டுக்குள் பயணம் மேற்கொள்வது போன்ற டிரெய்லர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி பிரபலம். இதை தொகுத்து வழங்கும் பியர் கிரில்சின் அடர்ந்த காட்டில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஆவணப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் பல பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில் ‘இன்டு த வைல்டு வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் இந்த சாகச பயணம் சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினி “வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது” என்றார். இதன் சிறிய டீசர் ஏற்கனவே வெளியா னது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் இந்த சாகச பயண நிகழ்ச்சி வருகிற 23-ந்தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தற்போது ரஜினிகாந்தும், பியர் கிரில்சும் கொடிய மிருகங்கள் உலவும் காட்டுக்குள் பயணம் மேற்கொள்வது போன்ற டிரெய்லர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ரஜினிகாந்த் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது, கயிறை பிடித்து மலையேறுதல், ஆற்றுக்குள் தண்ணீரில் இறங்கி நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
குழந்தை மாதிரி துறுதுறுவென ரஜினிகாந்த் இருப்பதாகவும், சினிமாவை மிஞ்சும் காட்சிகள் டிரெய்லரில் உள்ளது என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story