27-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் - டி.ராஜேந்தர்


27-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் - டி.ராஜேந்தர்
x
தினத்தந்தி 10 March 2020 4:43 PM IST (Updated: 10 March 2020 4:43 PM IST)
t-max-icont-min-icon

வரும் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம். திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.  

10%  டிடிஎஸ் வரி விதிப்பது நியாயமற்றது, டிடிஎஸ் வரி விதிப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். விரைவில் அனைத்து அமைப்புகளையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story