சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் அவதூறு நடிகை கஸ்தூரி ஆவேசம் + "||" + Actress Kasturi Furious

வலைத்தளத்தில் அவதூறு நடிகை கஸ்தூரி ஆவேசம்

வலைத்தளத்தில் அவதூறு  நடிகை கஸ்தூரி ஆவேசம்
சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய நபர் குறித்து நடிகை கஸ்தூரி புகார் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி அரசியல், சமூக விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் துணிச்சலாக கருத்துகள் பதிவிடுகிறார். இதற்கு எதிர்ப்புகளும் வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கிறார். ஒரு அரசியல் கட்சியில் இணைய, தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ரஜினிகாந்த் புகைப்படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்திருந்த ஒருவருக்கும், கஸ்தூரிக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இன்னொருவரும் கஸ்தூரி பற்றி அவதூறான கருத்தை பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் முகப்பில் அஜித்குமார் புகைப்படம் இருந்தது. இதனை பார்த்த கஸ்தூரி ஆவேசமானார். அவதூறு ஸ்கிரீன் ஷாட்டுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதனை அஜித்குமார் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன் தமிழக போலீசாருக்கு இதையே புகாராக அளிக்கிறேன். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். “ஏற்கனவே இவரது ஒரு அக்கவுண்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்” என்று இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரிக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். சிலர் கஸ்தூரி பதிவுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.