சினிமா செய்திகள்

`சினம்' குறும் படத்தில் விபசார அழகியாக சாய் தன்சிகா! + "||" + In the short film Sinam, Sai Dhanshika is acting in adulterous beauty woman

`சினம்' குறும் படத்தில் விபசார அழகியாக சாய் தன்சிகா!

`சினம்' குறும் படத்தில் விபசார அழகியாக சாய் தன்சிகா!
`சினம்' என்ற குறும் படத்தில் சாய் தன்சிகா விபசார அழகியாக நடித்து இருக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க துணிந்தது எப்படி? என்பதை சாய் தன்சிகா விளக்கினார்.
`சினம்' படம் சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டது. உலகம் முழுவதும் உள்ள 36 திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருக்கிறது. படத்தில், கதாநாயகன் கிடையாது. முழுக்க முழுக்க நானே நடித்து இருக்கிறேன். 20 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும் படமாக தயாராகி உள்ளது. விபசார அழகி வேடம் என்றாலும் கவர்ச்சி, ஆபாசம் எதுவும் இல்லாமல், படம் தயாராகி இருக்கிறது. முழு படமும் ஒரே `ஷாட்'டில் படமாக்கப்பட்டுள்ளது.

கதையின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டதால், விபசார அழகியாக நடித்தேன். படத்தை இயக்கியிருப்பவர், ஆனந்த் மூர்த்தி. பெங்களூரு தமிழரான இவர், டைரக்டர்கள் கதிர், பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். இதற்கு முன், `திலீபன்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முழு படமும் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது'' என்றார், சாய் தன்சிகா.

``இந்த படத்தில் சாய் தன்சிகா நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தால், படத்தை எடுத்திருக்க மாட்டேன்'' என்று டைரக்டர் ஆனந்த் மூர்த்தி கூறினார்.