சிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா நடிக்க குழந்தைகள் கடத்தல் பற்றிய படம், `வால்டர்'
சிபிராஜ்-ஷிரின் காஞ்ச்வாலா ஜோடியாக நடித்துள்ள `வால்டர்,' குழந்தைகள் கடத்தல் பற்றிய படமாக தயாராகி இருக்கிறது என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் யு.அன்பு. அவர் மேலும் கூறியதாவது:-
``வால்டர் படத்தில் சிபிராஜ், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். கும்பகோணத்தில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையின் மரணம் குடும்பத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது? என்பதையும் படம் பேசும். ரித்விகா, நட்டி என்ற நட்ராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஸ்ருதி திலக் தயாரித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.''
Related Tags :
Next Story