சினிமா செய்திகள்

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா + "||" + Rashmika is a vegetarian turned

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா

சைவத்துக்கு மாறிய நடிகை ராஷ்மிகா
எனக்கு அசைவம் என்றால் உயிர், ஆனாலும் அசைவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்று நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படம் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் எப்போதும் ஒரே மாதிரி சூழல் இருக்காது. நடிக்கும் கதை, கதாபாத்திரங்கள் மனதில் ஓடும்போது அதே மாதிரியான உணர்வுக்கு மாறி விடுவோம். நடித்து முடித்த பிறகு ரொம்ப கலாட்டா செய்வேன். பொறுமையாக இருக்கும் கதாநாயகர்கள் கூட என்னுடன் சேர்ந்து கும்மாளம் போட ஆரம்பித்து விடுவார்கள். இப்படி நிறைய சந்தோஷமான தருணங்கள் படப்பிடிப்பு தளத்தில் வந்துபோய் இருக்கிறது. அதனால்தான் உற்சாகமாக என்னால் வேலை செய்ய முடிகிறது.

கடந்த 6 மாதமாக அசைவ உணவு சாப்பிடுவது இல்லை. எனக்கு அசைவம் என்றால் உயிர். ஆனாலும் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தில் நான் இருக்கிறேன். படிப்படியாக முன்னேறாமல் வந்ததுமே ஒரேயடியாக இந்த இடத்துக்கு வந்து விட்டேன். இதை தக்க வைத்துக்கொள்ளவும், தொடர்ந்து இந்த இடத்திலேயே நீடிக்கவும் நன்றாக நடித்தால் மட்டும் போதாது.

உடல் தோற்றமும் நன்றாக இருக்க வேண்டும். இஷ்டத்துக்கு உணவை உள்ளே அனுப்பி எடை கூடினால் குறைப்பது கஷ்டம். எனவே சைவம்தான் சிறந்தது என்று முடிவு செய்தேன். வாழ்நாள் முழுவதும் சைவமாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.