“விஜய் படம் தியேட்டரில் தான் வெளிவரும்” தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி
இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகாது” விஜய் படம் தியேட்டரில் தான் வெளிவரும் என தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, குரல் சேர்ப்பு, படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன. படம் கடந்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது.இந்த நிலையில், ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதேபோல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படமும் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தன.இதுபற்றி அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம், ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து லலித்குமார் கூறியதாவது:-
“மாஸ்டர் படம் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என்பது வெறும் வதந்தி. சந்தர்ப்பம் பார்த்து யாரோ வதந்தியை பரப்புகிறார்கள். பல கோடி செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும். இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகாது”.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story