சினிமா செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் - நடிகை சுவாதி வேண்டுகோள் + "||" + Corona Awareness Actress Swathi video

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் - நடிகை சுவாதி வேண்டுகோள்

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் - நடிகை சுவாதி வேண்டுகோள்
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நடிகை சுவாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

நடிகர் விஜய் உடன் தேவா மற்றும் நடிகர் அஜித் உடன் வான்மதி உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்த நடிகை சுவாதி, சமூக வலைத்தளம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

நடிகை சுவாதி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஹாய் வணக்கம், நான் உங்கள் சுவாதி அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துகிட்டு இருக்கோம். ஒரு மாதமாக நாம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறோம். நிச்சயமாக சாத்தியமில்லாத ஒரு விஷயம் தான் ஆனா நாம் எல்லாரும் குடும்பத்தோடு சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறோம். 

இல்லையா,  அதனால் தான் இந்தியாவில் கொரோனாவுடைய பரவல் குறைவாக இருக்கிறது. அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை பார்க்கும் போது இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் அனைவரையும் முழுவதுமாக லாக்டவுன் செய்ததால் தான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.