சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்: ஏ.ஆர். ரகுமான் வெளிட்ட பாடல் + "||" + HumHaarNahiMaanenge A.R.Rahman

கொரோனாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்: ஏ.ஆர். ரகுமான் வெளிட்ட பாடல்

கொரோனாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்:  ஏ.ஆர். ரகுமான் வெளிட்ட பாடல்
கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். ஹம் ஹர் நஹி மானங்கே என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். 

இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரகுமான் பாடியுள்ளார். இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோகித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், சுருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரகுமான் போன்றோர் இணைந்து பாடியுள்ளனர்.  இந்தப் பாடலை எச்.டி.எஃப்.சி வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் சமூகவலைத்தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 வழங்குவதாக எச்.டி.எஃப்.சி வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 150 கோடியை  எச்.டி.எஃப்.சி வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.