பிரபல அமெரிக்கா பாடகி மடோனாவுக்கு கொரோனா அறிகுறி
பிரபல பாடகி மடோனாவுக்கு கரோனா ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு வந்துள்ளதாக அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
அமெரிக்க பாடகியும், நடிகையுமான மடோனா (வயது 61) ஆன்டிபாடி பரிசோதனையில் தனக்கு பாசிடிவ் என முடிவு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு, கொரோனாவுக்கான சாத்தியம் இருப்பதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஆன்டிபாடி பரிசோதனை என்பது குறிப்பிட்ட நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நபா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் அவரது ரத்தத்தில் உருவாகியிருக்கும். அதைக் கண்டறிவதே ஆன்டிபாடி பரிசோதனையாகும்.
பரிசோதனையின் முடிவை அறிந்துகொண்ட பிறகு, தாம் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மடோனாவின் பதிவுகளில் ரசிகர்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகக் கருத்துகளைக் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story