சினிமா செய்திகள்

கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதி வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்! + "||" + JK Rowling donates £1m to charity on Battle of Hogwarts anniversary

கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதி வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்!

கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதி வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்!
கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதியை ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் வழங்கி உள்ளார்.
லண்டன்,

உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தலை கீழாக புரட்டிப் போட்டு இருக்கிறது. தினக் கூலிகள் வேலைக்கு போக முடியாத நிலையில், பசியால் வாடி வருகின்றனர்.

கொரோனா ஒரு பக்கம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்து வரும் நிலையில், மறுபக்கம் அதை விட பசி நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அரசு நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் உலகளவில் உதவி செய்து வருகின்றனர். சிலர், நேரடியாக மக்களை சென்றடையும் உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளார். இந்த நிதி வீடுகளை இழந்து வாடும் ஏழை மக்கள் மற்றும்  பெண்கள், குழந்தைகளை உள்நாட்டு துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

தான் எழுதிய பேட்டில் ஆப் ஹாக்வார்ட்ஸ் நாவலின் 22வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடிய எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங், இறந்த கதாபாத்திரங்கள் குறித்து, இங்கே நான் எதையும் பேசப் போவதில்லை. என்னால் இயன்ற உதவிகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் எப்படி செய்ய முடியும், என்ன செய்யலாம் என்றே ஆலோசித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் அதில் இருந்து விடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.