80-ஸ் ரீயூனியன் பார்ட்டி: நடிகைகளுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி + "||" + Fun is meeting friends. Fun is a little dance
Chiranjeevi Konidela
80-ஸ் ரீயூனியன் பார்ட்டி: நடிகைகளுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி
80-ஸ் ரீயூனியன் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் டுவிட்டரில் இணைந்தார். அதைத்தொடர்ந்து டுவிட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் #BETHEREALMAN என்ற ஹேஷ்டேக்கில் தனது நண்பரும் நடிகருமான ரஜினிகாந்துக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்தனது டுவிட்டர் பக்கத்தில், நண்பர்களுடன் ஒரு சந்திப்பு. வேடிக்கையான ஒரு சிறிய நடனம்.வாக்குறுதியளித்தபடி, இங்கே த்ரோபேக் நடன வீடியோ உள்ளது.
80-ஸ் ரீயூனியன் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி. அந்த வீடியோவில் நடிகைகள் சுகாசினி, குஷ்பு, ஜெயசுதா, ராதா, ஜெயபிரதா ஆகியோருடன் நடனமாடுகிறார். இதனை பிரபு, சுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், படு குஷியாகிவிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1980-களில் சினிமாவில் கொடி கட்டி பறந்த முன்னணி நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் சங்கமிக்கும் நிகழ்வாக 80-ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற 80-ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜூனா, பாலகிருஷ்ணா, மோகன்லால், சிரஞ்சீவி, அம்பிகா, ராதா, பிரபு, சுஹாசினி, மோகன்லால், ரமேஷ் அரவிந்த், ரேவதி, ஜெயசுதால் லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நட்சத்திர ஒன்று கூடலை ஒருங்கிணைக்க ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் 2019-ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி அனைவரையும் ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது.