கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சல்மான்கான்!
கிராம மக்களுக்கு நிவாரண உணவுப் பொருட்களை வழங்க மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று சல்மான் கான் உதவி செய்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு பல்வேறு பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர். மேலும், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது இந்தி சினிமாவின் பிரபல நடிகர் சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். வாகனங்கள் கிடைக்காததால் மனித சங்கிலி போல வரிசையாக நின்று உணவுப் பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று உதவி உள்ளனர். இதனை பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story