கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!
கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு நடிகை ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்துள்ளார்.
சென்னை,
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் ‘லக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார். பின்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தந்தையிடமும், மும்பைக்கு சென்று தாய் சரிகாவிடமும் அறிமுகப்படுத்தினார். தற்காலிகமாக நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சுருதிஹாசன் பதிவிட்டார். இதுபோல் மைக்கேலும் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் என்று பதிவிட்டார்.
இந்தநிலையில், இந்தியாவில் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.
அதேபோல் நடிகை சுருதிஹாசனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் செய்யும் சுவாரஸ்யமான செயல்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது பின்தொடர்பாளர்களுடன் பகிர்ந்துவருகிறார். உடற்பயிற்சி செய்வது, பாடுவது, சமைப்பது என பதிவிட்டு வந்த அவர், தனது பியானோவுடன் சில இசை கலையை முயற்சித்து வருவதாக பதிவிட்டு இருந்தது அவரது இன்ஸ்டா ரசிகர்களையும் பல பிரபலங்களையும் வெகுவாக ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல் இயக்கத்தில் வெளியான அறிவும் அன்பும் பாடலிலும் ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் கடவுளான முருகனின் ஆயுதமான வேல், ஸ்ருதி ஹாசனின் டி-சர்ட்டில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story