ஒரு தடுப்பூசி; ஓ மை கடவுளே - நடிகர் விஜய் சேதுபதி டுவீட்


ஒரு தடுப்பூசி; ஓ மை கடவுளே - நடிகர் விஜய் சேதுபதி டுவீட்
x
தினத்தந்தி 5 May 2020 11:51 AM GMT (Updated: 5 May 2020 12:40 PM GMT)

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை,

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிர்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து உலகும்ழுவதும் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.   கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  1568 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12727 - ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள் உணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். பல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, மத்திய, மாநில அரசு, தன்னார்வலர்கள் மூலமும் அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.

Next Story