ஊரடங்கு விடுமுறையில் நாற்று நடும் நடிகை
உழுத நிலத்தில் நாற்று நடும் வீடியோவை கீர்த்தி பாண்டியன் வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை,
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் 50 நாட்களுக்கு மேலாக முடங்கி உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் உடற்பயிற்சி, யோகா, தியானம், புத்தகம் படித்தல், நடனம், சமையல், வளர்ப்பு பிராணிகளுடன் விளையாடுதல் என்று நேரத்தை கழிக்கின்றனர். பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் ஓட்டியபடி சென்று உழுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
“கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்துவிட்டேன்” என்று கூறியிருந்தார். தற்போது உழுத நிலத்தில் நாற்று நடும் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். வயலில் இறங்கி கையில் நாற்றுகளை வைத்து மற்ற பெண்களுடன் அவர் நாற்று நடும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ஊரடங்கை மீறவில்லை என்றும் வேலிகள் சூழ்ந்த தனது சொந்த நிலத்தில்தான் நாற்று நடுகிறேன்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story