சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா + "||" + Samantha Akkineni Takes Acting Lessons from Helen Mirren During Lockdown

பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா

பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா
ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்கிறேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சென்னை,

தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார்.

படத்துக்கு ஜானு என்று தலைப்பு வைத்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.   தற்போது சமந்தா விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் சமந்தா, தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்று வருவதாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமதில் தெரிவித்துள்ளார். இதன்முலம் நடிப்பில் தன்னை மெருகேற்றி வருவதாக சமந்தா கூறியுள்ளார்.