சினிமா செய்திகள்

விஷ வாயு கசிந்து விபத்து: மிகவும் வருத்தம் அடைந்தேன் - ரகுல் ப்ரீத் சிங் + "||" + Rakul Preet Singh Is Holding THIS In The Viral Video And It’s Not A Wine Bottle

விஷ வாயு கசிந்து விபத்து: மிகவும் வருத்தம் அடைந்தேன் - ரகுல் ப்ரீத் சிங்

விஷ வாயு கசிந்து விபத்து: மிகவும் வருத்தம் அடைந்தேன் - ரகுல் ப்ரீத் சிங்
விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து விபத்து குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
மும்பை,

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு வெளியேறியது. இதனால், அந்த பகுதியில் 3 கி.மீ., சுற்றளவிற்கு வாயு பரவியுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் வசித்து வருகிறார்.விசாகபட்டினத்தில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்து குறித்த அறிந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் ஆறுதல் தெரிவிக்கிறேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். எனது விசாக் மக்களே பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே  அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருந்துக் கடையில் அவர் சில மருந்துகளை வாங்கியிருக்கிறார். ரகுல் மாஸ்க் அணிந்த நிலையிலும் அது நடிகை ரகுல் தான் என கண்டுபிடித்த ரசிகர் ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஒருவர் தன்னை வீடியோ எடுப்பதை கடைசியாகக் கவனித்த ரகுல் , ஏன் இப்படி என்று கேட்டபடியே நகர்ந்தார்.

இதனையடுத்து டுவிட்டர் பதிவில் ஆ அருமை ! மருத்துவ கடைகள், மதுவை விற்பனை செய்கின்றன என்பது எனக்குத் தெரியாது என சுட்டிக்காட்டி உள்ளார்.