சகோதரர் பிறந்த நாள் கொண்டாட்டம்: அமலாபால் அபார ஆட்டம்


சகோதரர் பிறந்த நாள் கொண்டாட்டம்: அமலாபால் அபார ஆட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:13 AM IST (Updated: 8 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

பிரபு சாலமன் இயக்கத்தில், ‘மைனா’ படத்தில் நடித்து பிரபலமானார்.

சென்னை,

கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால், கொச்சியை அடுத்த பெரும்பாவூரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில், இவரும் ஒருவர். இவருடைய முதல் படம் ‘விகடகவி’ என்றாலும், ‘சிந்து சமவெளி’ படம்தான் அடையாளம் காட்டியது. அதில், மாமனாருடன் உறவு வைத்துக் கொள்ளும் மருமகளாக துணிச்சலுடன் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரபு சாலமன் இயக்கத்தில், ‘மைனா’ படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், இயக்குனர் விஜய்யுடன் காதல் வளர்த்தார். அவரையே திருமணமும் செய்து கொண்டார். விஜய், விக்ரம், தனுஷ் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து அவருடைய மார்க்கெட் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார். அதே வேகத்தில், இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்தார்.

விவாகரத்து ‘இமேஜ்’ தனது மார்க்கெட்டை காலி செய்து விடக்கூடாது என்பதற்காக, ‘ஆடை’ படத்தில், ஆடை இல்லாமல் நடித்து ‘கவர்ச்சி புரட்சி’ செய்தார். இரண்டாவதாக பிரபல பாப் இசை பாடகரை திடீர் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்த நிலையில், கொச்சி பெரும்பாவூர் பங்களாவில், அவருடைய தம்பி அபிஜித்தின் பிறந்த நாளை அமலாபால் அமர்க்களமாக கொண்டாடினார். டி.வி.யில் ஒரு வீடியோ படத்தை போட்டு, அதற்கேற்ப கவர்ச்சி ஆட்டம் போட்டார். அந்த ‘அபாரமான’ ஆட்டத்துக்கு நடுவே முத்தங்களை காற்றில் பறக்க விட்டார். அதன் மூலம் தம்பிக்கு வாழ்த்து சொன்னார். அதை அவருடைய அம்மா வீடியோவில் படமாக்கினார்!

Next Story