அதர்வாவை கவர்ந்த நயன்தாரா!
அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் இவர்.
சென்னை,
இன்றைய இளம் கதாநாயகர்களில் முன்வரிசையில் உள்ளவர், அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் இவர். வாரிசு நடிகராக இருப்பதில் உள்ள சவுகரியம், அசவுகரியம் பற்றி இவரிடம் கேட்டபோது, சிரித்தபடி பதில் அளித்தார்.
“வாரிசு நடிகராக இருப்பதில் சவுகரியங்களே நிறைய இருக்கிறது. இவன், இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படுவோம். அதன் மூலம் சுலபமாக ரசிகர்களை சென்று அடைவோம். அப்பா இப்படி நடித்தார்... மகன் எப்படி நடிப்பாரோ? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதுவே அசவுகரியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி பெரிதாக முன்னால் நிற்கும். அந்த சவாலை ஜெயித்துக் காட்டுவது, சுலபம் அல்ல”.
‘உங்கள் அப்பா ஒரு காதல் நாயகனாக பேசப்பட்டார். நீங்கள் எப்படி?’ என்று கேட்ட கேள்விக்கு, “அப்பாதான் என் ‘ஹீரோ’. எனக்கு காதல் கதைகளும் பிடிக்கும், விளையாட்டு தொடர்பான கதைகளும் பிடிக்கும். இரண்டும் கலந்த கதை, ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கதைதான் ‘ஈட்டி’. எனக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. போர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
‘உங்களுடன் நடித்ததில் பிடித்த கதாநாயகன், கதாநாயகி யார்?’
“கதாநாயகன், விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கதாநாயகி, நயன்தாரா. தன்னம்பிக்கை மிகுந்த பெண்”.
இவ்வாறு அதர்வா கூறினார்.
Related Tags :
Next Story