சினிமா செய்திகள்

கையில் பாட்டிலுடன் வைரலாகும் வீடியோ ஊரடங்கில் ரகுல் பிரீத் சிங் மது வாங்கினாரா? + "||" + Did Rahul Preet Singh buy alcohol?

கையில் பாட்டிலுடன் வைரலாகும் வீடியோ ஊரடங்கில் ரகுல் பிரீத் சிங் மது வாங்கினாரா?

கையில் பாட்டிலுடன் வைரலாகும் வீடியோ ஊரடங்கில் ரகுல் பிரீத் சிங் மது வாங்கினாரா?
ரகுல் பிரீத் சிங், சூர்யாவுடன் என்.ஜி.கே மற்றும் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை,

தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங், சூர்யாவுடன் என்.ஜி.கே மற்றும் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கை தளர்த்தி பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களும் மது வாங்க குவிகிறார்கள். அவர்களுக்கு தனி கியூ உருவாக்கி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் மதுக்கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி செல்வதுபோன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. ரகுல் பிரீத் சிங் ஒரு கடைக்கு சென்று விட்டு கையில் பாட்டில்களுடன் தனியாக நடந்து வருவதுபோன்ற காட்சி அந்த வீடியோவில் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரகுல்பிரீத் சிங் கொரோனா ஊரடங்கில் மது வாங்கி செல்வதை பாருங்கள் என்று கேலி செய்தார்கள்.

இதனை ரகுல் பிரீத் சிங் மறுத்துள்ளார். அந்த மருந்து கடையில் மதுவும் விற்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், கடையில் மருந்துகள் வாங்கி வந்ததாக டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். ஆனாலும் அதை நம்பாமல் ரகுல் பிரீத் சிங் பொய் சொல்கிறார். அவர் மதுவைத்தான் வாங்கிச் செல்கிறார் என்று டுவிட்டரில் பேசி வருகின்றனர்.