2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும் - கயல் பட ஹீரோ
2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும் என கயல் பட ஹீரோ சந்திரமௌலி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் 'கயல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரமௌலி. அந்த படத்தினை தொடர்ந்து 'ரூபாய்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்', இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது தற்போதைய புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நடிகர் சந்திரமௌலி, பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவை கல்யாணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சந்திரமௌலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ”2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார் .
Related Tags :
Next Story