கமல்ஹாசன் படத்தில் மீனாவுக்கு பதில் ரேவதி நடித்தது எப்படி?


கமல்ஹாசன் படத்தில் மீனாவுக்கு பதில் ரேவதி நடித்தது எப்படி?
x
தினத்தந்தி 10 May 2020 10:16 AM IST (Updated: 10 May 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

தேவர் மகன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர், மீனா. இவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

சென்னை,

கமல்ஹாசனின் மிகப்பெரிய வெற்றி படைப்பான ‘தேவர் மகன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர், மீனா. இவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அந்த நிலையில், மீனா மாற்றப்பட்டு அந்த கதாபாத்திரத்துக்கு ரேவதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதற்கு காரணம் என்ன? என்ற தகவலை அந்த படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்த ராசி.அழகப்பன் வெளியிட்டார். ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம், ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் தயாராவதாக பேசப்படுகிறது. இதுபற்றிய கலந்துரையாடலின்போது, ‘தேவர் மகன்’ படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்தன. அந்த படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்த ராசி.அழகப்பன் கூறியதாவது:-

‘தேவர் மகன்’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தவர், மீனாதான். அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ‘தேவர் மகன்’ திரைக்கதை மீண்டும் விவாதிக்கப்பட்டு, புதிய வடிவம் பெற்றது. அப்போது மீனா நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரால் ‘தேவர் மகன்’ படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

அவருக்கு பதில் ரேவதியிடம் கேட்டபோது, அவர் நடிக்க சம்மதித்தார். இப்படித்தான் ‘தேவர் மகன்‘ படத்துக்குள் ரேவதி வந்தார்.

இவ்வாறு ராசி.அழகப்பன் கூறினார்.

Next Story