“என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது” பிரியா பவானி சங்கர்


“என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது” பிரியா பவானி சங்கர்
x
தினத்தந்தி 10 May 2020 10:23 AM IST (Updated: 10 May 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

சென்னை,

‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.

அடுத்து, விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

“தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பேசப்படுகிறதே... நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர் கூறியதாவது:-

“என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story