இளம் இயக்குனர் மரணம்


இளம் இயக்குனர் மரணம்
x
தினத்தந்தி 11 May 2020 10:12 AM IST (Updated: 11 May 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

மலையாள இளம் இயக்குனர் ஜிபித் ஜார்ஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை,

மலையாள இளம் இயக்குனர் ஜிபித் ஜார்ஜ். இவர் ஜினோய் ஜனார்தனுடன் இணைந்து இயக்கிய ‘கோழிபோரு’ என்ற மலையாள படம் ஊரடங்குக்கு முன்பு திரைக்கு வந்தது. இதில் நவஜித் நாராயணன், இந்திரன், அஞ்சலி நாயர், வீணா உள்பட பலர் நடித்திருந்தனர். தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்த படத்தை கொரோனா ஊரடங்கால் நிறுத்தி விட்டனர். ஊரடங்கு முடிந்ததும் படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர ஜிபித் ஜார்ஜ் ஏற்பாடுகள் செய்து வந்தார்.

இந்த நிலையில் கொச்சியில் வசித்து வந்த ஜிபித் ஜார்ஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 30. இளம் இயக்குனர் மாரடைப்பால் இறந்தது மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story