என் வருங்கால குழந்தைகளின் அன்னைக்கு...நயன்தாராவை குறிப்பிட்ட விக்னேஷ் சிவன்

என் வருங்கால குழந்தைகளின் அன்னைக்கு... என நயன்தாராவை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிட்டுன் உள்ளார்.
மேலும் நயன்தாரா ஒரு அழகிய குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் வருங்கால குழந்தைகளின் தாயின் கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் பலகருத்துக்களை தெரிவித்து உள்ளனர்
என்னது நயன்தாரா விரைவில் தாயாகப் போகிறாரா, சொல்லவே இல்லை என்று கமெண்ட் அடித்துள்ளனர். நயன்தாரா பற்றி இப்படி தேவையில்லாத வதந்திகள் பரவுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story